வெள்ளி, 22 ஜூன், 2012

இத்திருமணங்களை ஒரு பொது இடத்தில் வைத்து, ஏழை கிறித்துவர்களுக்கும், ஏழை இசுலாமியர்களுக்கும் சேர்த்து நடத்தி வைத்திருப்பார் ஜெயலலிதா.   திருமணங்களை திருவேற்காடு இந்துக் கோயிலில் நடத்துவதும், திருமணங்களை “இந்து” சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தியதுமே ஜெயலலிதாவின் மூடநம்பிக்கைக்கு ஒரு சான்று.    ஊழல் புரியும் கவுன்சிலர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கும் என்று ஜெயலலிதா அறிவித்தால் அதை மீறி கவுன்சிலர்கள் செயல்படுவார்களா ?  அதை விடுத்து மாநகராட்சியை கலைப்பேன் என்று சொல்வது சரியான நிர்வாகமா ?
மேலும், இந்தக் கவுன்சிலர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் தானே, ஜெயலலிதா எங்கே சென்றாலும், பல கிலோமீட்டர்களுக்கு ப்ளெக்ஸ் போர்டுகளை வைத்து, வண்ண விளக்குகளைக் கட்டி, “தாயே… அம்மா… பிச்சைப் போடுங்கம்மா…” என்று பேனர்கள் வைக்கிறார்கள் ? இந்தக் கவுன்சிலர்களும், அமைச்சர்களும், தங்களுக்கு வரும் ஊதியத்தில் இது போன்ற விளம்பரங்களை வைக்க முடியுமா என்பது ஜெயலலிதாவுக்கு ஏன்   உறைக்கவில்லை ?   தாயே அம்மா என்று கூழைக்கும்பிடு போடும், அதிமுக அடிமைகள், எப்படியாவது குறுக்கு வழியில் சம்பாதிக்கவே இப்படி கூழைக்கும்பிடு போடுகிறார்கள் என்பது ஜெயலலிதாவுக்கு ஏன் புரியவில்லை ?    வயது வித்யாசம் பாராமல், அதிமுக அடிமைகள் எப்போதும் காலில் விழுவது எதையாவது எதிர்ப்பார்த்தே என்பது ஜெயலலிதாவுக்கு ஏன் தெரியவில்லை ?
எது அரசின் வேலையா ?   திருமணம் நடத்தி வைப்பது அரசின் வேலையா ? அரசு என்றால் என்ன என்று வள்ளுவர் விளக்குகிறார்.
1818
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.  ஒரு அரசானது, மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைத் தீட்ட வேண்டும்.  மக்களின் நலனைப் பேண வேண்டும். மக்களுக்காக உழைக்க வேண்டும்.  திருமணம் செய்வது, பிள்ளை பெற்றுக் கொள்வது இவையெல்லாம், தனி நபர்களின் வேலை.  அரசின் வேலை அல்ல.
ஜெயலலிதா அரசு கடந்த வாரம், நடத்தி வைத்த 1006 திருமணங்களைப் பற்றியே இந்தக் கட்டுரை. ஜெயலலிதா இந்தத் திருமண விழாவில் பேசிய போது “1991 முதல் 1996 வரை நான் முதலமைச்சராக இருந்த போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரத்தில் 2,500 திருமணங்களையும், திருச்சியில் 5,004 திருமணங்களையும் நடத்திக் காட்டினோம்.
இரண்டாவது முறையாக நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் 2002 ஆம் ஆண்டு 1,008 திருமணங்களையும்; 2003-ஆம் ஆண்டு 1,053 திருமணங்களையும் இதே திருவேற்காட்டில் நான் நடத்தி வைத்தேன். ”
இந்தியாவில் எங்காவது ஒரு அரசு இப்படி திருமணம் நடத்திக் கொண்டிருக்கிறதா என்பது சந்தேகமே.        கட்சிக்காரர்கள் வீட்டுத் திருமணங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வது என்பது வேறு.  ஆனால், மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து, அரசுத் துறை சார்பில் திருமணம் நடத்துவது என்பது வேறு.  இத்திருமண ஜோடிகளுக்கு 4 கிராம் தங்க திருமாங்கல்யம் 6 கிராம் எடையுள்ள 4 வெள்ளி மெட்டிகள்; முகூர்த்தப் புடவை; ரவிக்கை; ஜரிகை வேட்டி; ஜரிகை துண்டு; சட்டை; உள்ளிட்ட  28 வகையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன ஆகியவை அரசு செலவில் வழங்கப்பட்டுள்ளன.
ஏழைகளுக்கும், வறுமைக் கோட்டுக்கும் கீழ் உள்ளவர்களுக்கு திருமணம் செய்வதற்கு உதவித்தொகை வழங்குவது என்பதைக் கூட ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம்.   ஆனால், அரசே திருமணம் நடத்துவது அரசின் பணி அல்ல. நாட்டில் வறுமையை ஒழிப்பது, வேலைவாய்ப்பு வழங்குவது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது போன்ற பல்வேறு பணிகள் அரசுக்கு உள்ளன.   அதை விடுத்து திருமணம் நடத்தி வைப்பது என்பது, தேவையற்ற வரிப்பணத்தை செலவிடுவதோடு மட்டுமல்லாமல், அரசு தன் கடமையிலிருந்து தவறி, தேவையற்ற பணிகளில் ஈடுபடுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.
ஜெயலலிதா, எப்போது ஆட்சிக்கு வந்தாலும், இது போலத் திருமணங்கள் நடத்தி வைப்பது அவருக்கு ஏழைகளின் மீது உள்ள அக்கறை காரணமாக இல்லை.   சோதிடத்தில் தீவிர நம்பிக்கை உள்ள ஜெயலலிதா, இத்திருமணங்களை நடத்துவது, சோதிடர்களின் அறிவைப்படி மட்டுமேயன்றி, ஏழைகளின் மீதான அன்பின் காரணமாக நிச்சயம் இருக்க முடியாது.  அப்படி ஏழைகளின் மீது உண்மையான அக்கறை இருக்குமேயானால், இத்திருமணங்களை ஒரு பொது இடத்தில் வைத்து, ஏழை கிறித்துவர்களுக்கும், ஏழை இசுலாமியர்களுக்கும் சேர்த்து நடத்தி வைத்திருப்பார் ஜெயலலிதா.   திருமணங்களை திருவேற்காடு இந்துக் கோயிலில் நடத்துவதும், திருமணங்களை “இந்து” சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தியதுமே ஜெயலலிதாவின் மூடநம்பிக்கைக்கு ஒரு சான்று.   இது போல திருமணங்களை நடத்தினால், அது தனக்கு ஜோதிடர்களின் அறிவுரைப்படி பரிகாரமாக அமையும் என்று ஜெயலலிதா தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறாரோ என்றே தோன்றுகிறது.  ஜோதிடர்களின் அறிவுரைப்படியே 1006 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தால், ஜெயலலிதாவுக்கு புண்ணியம் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, இத்திருமணங்களை ஜெயலலிதா தனது சொந்தப் பணத்தில் அல்லவா நடத்தி வைத்திருக்க வேண்டும் ?  மக்கள் வரிப்பணத்தில் நடத்தி வைக்கும் திருமணங்களுக்கு உண்டான புண்ணியம் அவருக்கு எப்படி   போகும் ?
திமுக மீதும், அதன் தலைவர் மீதும், அவர்களின் பரிவாரங்கள் மீதும் எழுந்த கடும் கோபத்தின் காரணமாக, ஜெயலலிதாவைப் பற்றி நன்கு தெரிந்தும் கூட, வேறு வழியின்றி மக்கள் மீண்டும் அவருக்கு அபிரிமிதமான ஒரு வெற்றியைத் தந்தார்கள். அந்த வெற்றி திமுக மீது உள்ள வெறுப்பால் வந்த வெற்றி என்பதை ஜெயலலிதா எப்போதுமே புரிந்துகொள்ள மாட்டார் போலிருக்கிறது.  திமுக மீது இருந்த அந்த வெறுப்பு அதிமுக மீது திரும்ப நெடுநாட்கள் ஆகாது என்பதை ஜெயலலிதா உணர மறுக்கிறார்.
நேற்று மாநகராட்சியைக் கலைத்து விடுவேன் என்று ஜெயலலிதா சென்னை மாநகராட்சிக் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கடுமையாக பேசியிருக்கிறார் என்பதை ஊடகங்கள் புதனன்று பெரிய செய்தியாக வெளியிட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் முடிந்த மறுநாள் முதல், இந்தக் கவுன்சிலர்கள் கொள்ளையடிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பது ஊருக்கே தெரியும்.    சாலைகளில் செங்கல், மணல் கொட்டியிருப்பதைப் பார்த்தவுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் வசூல் செய்வதில் தொடங்கி, குப்பைகளைச் சரிவர அள்ளுவதற்குக் கூட பணம் வசூல் செய்வதாக பரவலான புகார்கள் உள்ளன.
கவுன்சிலர்கள் மட்டுமல்லாமல், அமைச்சர் பெருமக்களும் வசூல் வேட்டையைத் தங்கு தடையின்றி நடத்தி வருவது தலைமைச் செயலக வட்டாரத்தில் யாரைக்கேட்டாலும் தெரிகிறது.    இந்த வசூல் வேட்டைகளைப் பற்றி எழுத வேண்டிய ஊடகங்கள், ஜெயலலிதா தரும் “அரசு விளம்பரங்கள்” என்ற லஞ்சத்தை வாங்கிக் கொண்டு, அமைதியாக இருக்கின்றன.
என்னமோ கவுன்சிலர்கள் லஞ்சம் வாங்குவது, கடந்த வாரம் தொடங்கியது போல, ஜெயலலிதா கடும் சினம் கொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.   லஞ்சம் வாங்கும் கவுன்சிலர்களை எதற்காகத் திட்ட வேண்டும் ?  உண்மையிலேயே நேர்மையான ஆட்சி வழங்க வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு துளியாவது இருந்தால், லஞ்சம் வாங்கும் கவுன்சிலர்கள் மீது வழக்கு பதிவு செய்யச் சொல்லி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டியதுதானே ?    அதைவிட்டு மாநகராட்சியைக் கலைத்து விடுவேன் என்ற வெற்று மிரட்டல் எதற்கு ?   கோடிக்கணக்கான வரிப்பணத்தை செலவு செய்து, உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடித்த பிறகு, உள்ளாட்சிகளைக் கலைத்தால், அதனால் ஏற்படும் இழப்பை ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டை விற்று ஈடு செய்வாரா ? ஊழல் புரியும் கவுன்சிலர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கும் என்று ஜெயலலிதா அறிவித்தால் அதை மீறி கவுன்சிலர்கள் செயல்படுவார்களா ?  அதை விடுத்து மாநகராட்சியை கலைப்பேன் என்று சொல்வது சரியான நிர்வாகமா ?
மேலும், இந்தக் கவுன்சிலர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் தானே, ஜெயலலிதா எங்கே சென்றாலும், பல கிலோமீட்டர்களுக்கு ப்ளெக்ஸ் போர்டுகளை வைத்து, வண்ண விளக்குகளைக் கட்டி, “தாயே… அம்மா… பிச்சைப் போடுங்கம்மா…” என்று பேனர்கள் வைக்கிறார்கள் ? இந்தக் கவுன்சிலர்களும், அமைச்சர்களும், தங்களுக்கு வரும் ஊதியத்தில் இது போன்ற விளம்பரங்களை வைக்க முடியுமா என்பது ஜெயலலிதாவுக்கு ஏன்   உறைக்கவில்லை ?   தாயே அம்மா என்று கூழைக்கும்பிடு போடும், அதிமுக அடிமைகள், எப்படியாவது குறுக்கு வழியில் சம்பாதிக்கவே இப்படி கூழைக்கும்பிடு போடுகிறார்கள் என்பது ஜெயலலிதாவுக்கு ஏன் புரியவில்லை ?    வயது வித்யாசம் பாராமல், அதிமுக அடிமைகள் எப்போதும் காலில் விழுவது எதையாவது எதிர்ப்பார்த்தே என்பது ஜெயலலிதாவுக்கு ஏன் தெரியவில்லை ?
கடந்த ஒரு ஆண்டாக, தமிழகத்தில் தொழில் தொடங்க வரும், தொழிலதிபர்களும், ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்களும் அரசில் எந்த வேலையும் நடக்கவில்லை என்ற புலம்புவது ஜெயலலிதாவுக்குத் தெரியுமா ?    ஜெயலலிதாவை அணுக முடியாததால், யாரை அணுகுவது, எப்படி அணுகுவது என்று புரியாமல் புலம்பி வருவது ஜெயலலிதாவுக்குத் தெரியுமா ?  பெரும்பாலான தொழிலதிபர்கள், கருணாநிதி ஆட்சியே பரவாயில்லை, அப்போது வேலையாவது நடந்தது.. … இந்த ஆட்சியில் எந்த வேலையும் நடக்காமல் முடங்கிப்போயிருக்கிறது என்று புலம்புவது ஜெயலலிதாவுக்குத் தெரியுமா ?
13 அக்டோபர் 2011 அன்று உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை அனைத்து வாகனங்களுக்கும் எட்டு வாரங்களுக்குள் பொறுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு இன்னும் செயல்படுத்தப்படமல் இருப்பதற்கு, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர்தான் காரணம் என்பது ஜெயலலிதாவுக்கும் தெரியுமா ?  அவர் சொன்ன நிறுவனத்துக்கு நம்பர் பிளேட்டுகள் தயாரிக்க டெண்டர் வழங்காத காரணத்தால், போக்குவரத்து ஆணையரும், போக்குவரத்துச் செயலாளரும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த இரு மாறுதல் ஆணைகளிலும் கையெழுத்திட்டது ஜெயலலிதாதானே ? அவருக்குத் தெரியாமலா இவையெல்லாம் நடந்து வருகிறது ?   தான் மின்சார ஒழுங்குமுறை ஆணையராக வேண்டும் என்பதற்காக, கடந்த மூன்று மாதங்களாக அப்பதவியை காலியாகவே வைத்திருக்கிறாரே தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி…  இவையெல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமலா நடக்கிறது ? ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்த பரஞ்சோதி என்பவர், காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்று ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவிக்கிறது.  ஒரு நேர்மையான ஆட்சியாளராக இருந்தால், பரஞ்சோதியை கைது செய்து விசாரிக்கவும் என்றல்லவா ஜெயலலிதா உத்தரவிட்டிருக்க வேண்டும் ?  திமுக ஆட்சியில் நடந்த இடைத்தேர்தலில் பணம் கொடுக்கிறார்கள், என்று குற்றம் சுமத்தி விட்டு, புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அனைத்து அமைச்சர்களையும் புதுக்கோட்டைக்கு அனுப்பி விட்டு, ஒரு மாதத்துக்கு தலைமைச் செயலகத்தில் அனைத்துப் பணிகளையும் முடக்கிப் போட்டு, அத்தனை வீட்டுக்கும் வாக்குக்கு பணம் கொடுப்பதுதான் நேர்மையான ஆட்சி நடத்துவதன் லட்சணமா ?  இப்படி மந்திரிப் பரிவாரங்களை ஒரு மாதத்துக்கு முகாம் போட வைத்து, பணம் கொடுத்து பெற்ற வெற்றியை ஒப்பிடுகையில், விஜயகாந்த பெற்ற 40 ஆயிரம் வாக்குகள், 4 லட்சத்துக்கு சமம். நேர்மையான ஆட்சி நடத்துவதை விட்டு விட்டு,  திருமணம் நடத்தி வைப்பதுதான் அரசின்  வேலையா ?  தமிழ்நாட்டின் நிலையை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.   ஆங்கிலத்தில், Jumping from the frying pan to fire என்று சொல்லுவார்கள்.   எண்ணைச் சட்டியிலிருந்து எரியும் நெருப்பில் விழுவது என்ற பொருளில்.  அதிமுக ஆட்சியை தேர்ந்தெடுத்த மக்கள், அதே எண்ணத்தில்தான் இருக்கிறார்கள்.
இந்த அநியாயங்கள், ஜெயலலிதாவுக்கு தெரிந்து நடந்தால் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.  தெரியாமல் நடந்தால், ஜெயலலிதா ஆட்சி நடத்த வக்கற்றவர் என்றே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.   அப்படித் தவறினால், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ஜெயலலிதாவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
திருமண ஆல்பம்.

1808
1809
1810
1812
1813
1814

அதிமுக அடிமைகள் வைத்திருந்த சில பேனர்கள்
DSC_8540
DSC_8542
DSC_8549
DSC_8553
DSC_8556
DSC_8571

DSC_8579
DSC_8580
DSC_8601

DSC_8602
விழாவுக்காக இயக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அரசுப்பேருந்துகளில் சில
DSC_8568
DSC_8572
DSC_8582
DSC_8591
திருமணம் முடிந்து அநாதையாக நடந்து வரும் மாப்பிள்ளை
DSC_8605

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

டாக்டர் சிரிப்புகள்..!

டாக்டர்... என்னவோ தெரியல... முன்னெல்லாம் வெயில்ல போய்ட்டு வந்தா
பேச்சே வராது.. இப்பல்லாம் என்னடான்னா துண்டு துண்டா பேச வருது!''

''வேற ஒண்ணுமில்ல... அப்போ ஊமை வெயில்... இப்ப கத்தரி வெயில்!''

+++++++++++++++++++++++++++++++++++++++++++

''நீங்க நிறைய இடியாப்பம் சாப்பிடுவீங்களா?''

''ஆமாம் டாக்டர்! எப்படிக் கண்டுபிடிச்சீங்க?''

''உங்க குடல்ல ஏகப்பட்ட சிக்கல் இருக்குதே...''

+++++++++++++++++++++++++++++++++++++++++++

''எதுக்கு டாக்டர் ஆபரேஷன் பண்ணும்போது என்கிட்டே ஒரு கத்தியைக் கொடுக்கறீங்க?''

''நான் நிராயுதபாணியா யாரையும் கொல்ல மாட்டேன்.''

+++++++++++++++++++++++++++++++++++++++++++

''என்ன டாக்டர் இது.... சிரிஞ்ச் ப்ளூ கலர்ல இருக்கு?''

''ஹி... ஹி... வேற ஒண்ணுமில்லே! பேனாவுக்கு இங்க் போட வேண்டியிருந்தது...!''

+++++++++++++++++++++++++++++++++++++++++++

''உங்க உடம்பு ஒரு 'மாமனார் வீடு' மாதிரிங்க!''

''ஏன் டாக்டர் அப்படி சொல்றீங்க?''

''எந்த வியாதி வந்தாலும் உடம்பை விட்டு 'லேசுல கிளம்ப' மாட்டேங்குதே!''

++++++++++++++++++++++++++++++++++++++++++++

''டாக்டரைப் பார்க்கணுமா? டோக்கன் வாங்கிட்டு உட்காருங்க...''

''நான் ஆபரேஷன் பேஷண்ட்...!''

''அப்ப 'டிக்கெட்' வாங்கிட்டு உட்காருங்க!''

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

'கண்டிப்பா உங்க பையன் டாக்டர் ஆவான்...''

''அவ்வளவு நல்ல படிக்கிறானா..?''

'' இல்லே.... அவ்வளவு மோசமா எழுதறான்...!''

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

''அரைமணி நேரமா எதுக்கு என்னையே பார்த்துட்டிருக்கீங்க?''

''உடம்பு சரியில்லைனா உடனடியா டாக்டரை பார்க்கணும்னு சொன்னாங்க.''

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

ஏழைகள் சார்பில் ராசாவை பாராட்டுகிறேன்:கருணாநிதி

ஏழைகள் சார்பில் ராசாவை பாராட்டுகிறேன்:கருணாநிதி


மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார்.
அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும்
ஆச்சரிய படுவதற்கு இல்லை.

என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில்
சேவையை கொண்டுவந்தது ராசாவா?
மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு
மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G
அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம்
வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming
and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய
இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வாதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்திற்கு
பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரையம் செய்யவில்லை.
குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.

நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக
நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை
உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது.
இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளன. ஆனால் பயன்படுத்துவோரின்
எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி
டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை
தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும்.
டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த
122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நியாய கணக்கு:

இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது.
எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு
நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY)
பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம்.
ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். அப்போ 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின்
மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு
செலவாகிறது.
ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு
வருடத்திற்கு12x10,800 = 1,29,600 கோடிகள்.
2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ
குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை 2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு
வெறும் 15 நிமிடங்கள்

கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.
இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன
என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு
அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக
கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே
முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி
காண்பிப்பது"INFINITIVE". நான்
தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட
இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம்
அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து
இருக்கவேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை
என்றுதான் ஒவ்வொரு
மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக
யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது
சொந்தநாட்டு
மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above
middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும்,
ஏழை மக்கள்
மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும்.
மனிதாபிமானம், மனிதநேயம்
மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த
ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை
கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.

துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும்
அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க
முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650
கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு
சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு
நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது
பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை
சென்று அடைந்துள்ளது.

துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான
நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர்
பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை
என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி
இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற
பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட்
நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால்
சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட
மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற
போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை
ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம்
நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து
இருப்பார்கள்.

துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது
பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற
நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும்
பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய
அச்சுறுத்தல்.

துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு
சம்பந்தபட்ட, கைபற்றபட்ட
ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை
கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில்
ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய
ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும்
முறைகேடு.

துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை
ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம்
செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில்
ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த
உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள்
என்ற ஆணவ நினைப்பு.

துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை
பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி
மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை
இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு
செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால்
ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள்
என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று
ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை
கண்டிருக்கலாம்.

துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை
சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு
வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு
முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த
உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின்
விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை
உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில்
விட்டு செல்கின்றனர்.

இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த
ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி?
ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை
பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரை
குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய
சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின்
விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது
மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல்
எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான்
செய்கின்றனர்.

அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக
செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும்
செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும்.
குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக
விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த
ஏழை, பணக்காரன்
இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.


இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால்
அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும்
மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம்
வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு
என்னும் மூலதனத்தை
மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான்
இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை.
இலசவசம் கொடுக்க தேவையான
வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது
நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை
தரமும் மாறபோவதில்லை.

எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை
ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள்
உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே
தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள்.
ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான்
போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX ,
Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த
ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில்
சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.


செவ்வாய், 7 ஏப்ரல், 2009



மத்திய அமைச்சர் . சிதம்பரம் மீது ஷூ வீசி தாக்கப்பட்டார் .











செவ்வாய், 31 மார்ச், 2009

மின்சார மரம்




வீடியோவை பாருங்கள் , ........................ மரத்தின் அருகில் மின்சார கருவிகள் இருந்தால் தொடாதீர்கள் . தொட்டால் ..........................................................


வீடியோவை பாருங்கள் .

படித்ததில் பிடித்தது










ச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் டி.வி . ராஜேந்திரன் எழுதியது




தேர்தல் நடக்கும் போது எந்த ஒரு கட்சியும் ஆட்சியில் இருக்க கூடாது


கவர்னர் அல்லது அரசு தலைமைச் செயலர் தலைமையில் தேர்தல் நடத்த பட வேண்டும்.




அரசியல் கட்சிகள் இரண்டுதான் இந்திய அளவில் இருக்க வேண்டும்.




ஒருமுறை பதவி வகித்தவர், எக்காரணம் கொண்டும் மறு முறை எந்த தேர்தலிலும் போட்டியிட கூடாது.




ஒரு கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு மாற கூடாது.




ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொதிகளில் போடியிடகூடது .